சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமையாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் மார்க்கோ ரூபியோ குற்றம் சாட்டினார். “இத்தொற்று நோயை உலகளாவிய தொற்றாக அறிவிப்பது குறித்து ஏற்றுக் கொள்ள இயலாத காலதாமதத்துடனான உலக சுகாதார அமைப்பின் முடிவு செய்தது என்றும், உலக சுகாதார மையத்தின் நம்பகத்தன்மையோடு சீன எவ்வாறு சமரசம் செய்து கொண்டது என்றும் இவை பற்றிய விசாரணையை அமெரிக்கா துவக்கிடும் எனவும் அவர் எழுதினார். உலக சுகாதார அமைப்பிற்கான அமெரிக்காவின் நிதி அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தனிக்கதை. தமது குற்றச்சாட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில், எந்த ஆதாரங்களையும் ரூபியோ முன்வைக்கவில்லை.
இத்தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக அறிவிப்பதில் உலக சுகாதார அமைப்பு காலம் தாழ்த்தியதா? 2009ம் ஆண்டில், ஏப்ரல் 15ம் தேதியன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெச்1என்1 தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பின்னர், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் – ஜுன் 11ம் தேதிதான் - இதை உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. சார்ஸ்-கோவ்-2 தொற்றுநோயைப் பொறுத்தவரை, ஜனவரி 2020ல் தான் சீனாவின் வுஹானில் இந்நோயால் பீடிக்கப்பட்ட முதல் நோயாளி கண்டறியப்பட்டார்.
அதன் பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் – மார்ச் 11ம் தேதியன்று – உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதனிடையே, உஹானுக்கு (ஜனவரி 20-21 ஆகிய தேதிகளில்), பெய்ஜிங், குவாங்டாங், சிச்சுவான் மற்றும் வுஹானுக்கு (பிப்ரவரி 16-24 ஆகிய தேதிகளில்) ஆய்வுக் குழுவை உலக சுகாதார அமைப்பு அனுப்பியது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக அவர்கள் முழுமையான விசாரணையை மேற்கொண்டனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியிடப்படுவதற்கான கால அவகாசமும் முன்பிருந்ததைப் போன்றே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் 2009ல் இருந்ததை விட 2020ல் அது விரைவானதாக இருந்தது.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழோ அல்லது மார்க்கோ ரூபியோவோ, அவர்களுக்கு உலகளாவிய தொற்றுநோய்க்கு சீன அரசும் சீன மக்கள் சமூகமுமே காரணம் என்றும், இவர்களது இத்தகைய தோல்வி உலக சுகாதார அமைப்பை சமரசம் செய்து கொள்ளச் செய்ததோடு உலகளாவிய தொற்றையும் ஏற்படுத்தியது என்றும் முடிவுக்கு வருவதில் அவசரம் காணப்பட்டது. ஆனால் உண்மைகள் இதற்கு சம்பந்தமில்லாதவையாக ஆயின. உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படவில்லை என்பதையும், பெய்ஜிங்கிற்கு இந்நோய் குறித்த தகவலை அளித்திடட உள்ளூர் அதிகாரிகள் அச்சம் கொண்டிருக்கவில்லை என்பதையும், நடைமுறை மீறல் எதுவும் இருக்கவில்லை என்பதையே எங்களது ஆய்வும் எடுத்துரைக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, மர்மமானதாகவும் சிக்கலானதாகவும் இருந்தது. என்ன நடக்கிறது என்பது பற்றி சீன மருத்துவர்களும், அதிகாரிகளும் விரைவாகக் கற்றறிந்தனர். அதன் பின்னர், தங்களிடம் உள்ள விவரங்களின் அடிப்படையில் விவேகமான முடிவுகளை எடுத்தனர்.