கோவை, ஜன. 16– தமிழர் பண்பாட்டை பாதுகாப் போம், பாசிசத்தை வேரறுத்து ஒற்று மையை பாதுகாப்போம் என்கிற முழக் கத்தோடு வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அனைவருக்கும் சமச்சீரான கல்வி, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை என்கிற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களப்பணியாற்றி வருகிறது. ரத்த தானம், உழைப்பு தானம் ஆகிய வற்றில் முத்திரை பதித்தும், ஸ்தல கோரிக்கைகளுக்காக தினந்தோறும் மக்கள் பணியாற்றி வருகிற இயக்க மாக திகழ்கிறது. இவ்வமைப்பின் சார்பில் தமிழகத் தில் பொங்கல் திருநாளையொட்டி வருடந்தோறும் தமிழகத்தின் பண் பாட்டை உயர்த்திப்பிடிக்கும் பொங் கல் விழாவாக நூற்றுக்கணக்கான மையங்களில் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, மக்களை பிரிக்கும் பாசிசத்தை வீழ்த்தி, இந்திய ஒற்று மையை பாதுகாப்போம். தமிழர் பண் பாட்டு பாரம்பரியத்தை பாதுகாப் போம் என்கிற முழக்கத்தோடு பொங் கல் விழா கோவையில் நடைபெற்றது. எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் விளாங்குறிச்சி, கீரணத்தம், அத் திக்குட்டை, உடையாம்பாளையம், அம்பேத்கர் நகர், சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம், ந.க.புதூர், சிங்கை நகரக்குழுவில் ஒண்டிபுதூர், மதுரை வீரன் கோவில் வீதி, சூர்யா நகர் மற்றும் நேரு வீதியில் மக்கள் ஒற் றுமை பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இதேபோல், பீளமேடு நகர குழு வில் நேரு வீதி, தண்ணீர் பந்தல், ஆவாரம்பாளையம், வடக்கு நகர குழுவில் கணபதிபுதூர், ரத்தினபுரி, சாஸ்திரி வீதி, குட்டி கவுண்டர் லே-அவுட், கண்ணப்ப நகர், பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அப்ப நாயக்கன்பாளையம், துடிய லூர், ஜடல் நாயுடு வீதி அறிவொளி நகர், சூலூர் ஒன்றியத்தில் நடுப் பாளையம், அன்னூர் ஒன்றியத்தில் ஒட்டர் பாளையம், இந்திரா நகர், உப்பு தோட்டம், கிழக்கு நகரக் குழுவில் அண்ணா புதுலைன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மதுக்கரை ஒன்றியத்தில் ஒக்கிலி பாளையம், பொள்ளாச்சி தாலுகாவில் வடசித்தூர் ஆகிய பகுதிகளில் 14 ஆம்தேதி துவங்கிய பொங்கல் விளையாட்டு விழா 17 ஆம்தேதி நிறைவு பெறுகிறது. தொடர்ந்து 18 ஆம்தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை இவ்விழாக்கள் பல்வேறு கிளைகளில் நடைபெற உள்ளது. இந்த பொங்கல் விளையாட்டு விழாக்களில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, இசை நாற்காலி, வேக நடைபோட்டி, கோலப்போட்டி, உரிஅடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற் றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மேடை நிகழ்வில் மாறுவேடப்போட்டி, நடனப்போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டி களும், பல்வேறு கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. மாவட்ட, மாநில அளவில் சாதனை புரிந்த சாதனையாளர்களும் இவ்விழா வில் கௌரவிக்கப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய இவ்விழாக்களில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினர்கள் சி.பத்மநாபன், அ.ராதிகா, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டியன், சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், சூலூர் செயலாளர் எம்.ஆறுமுகம், வடக்கு நகர செயலாளர் என்.ஆர்.முரு கேசன், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், அன்னூர் செயலாளர் முசீர், மதுக்கரை செயலாளர் ரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.பாலாமூர்த்தி, விவ சாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மணி கண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் அமுதா, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மாவட்ட தலை வர் அசார் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் வி.சந்திரசேகரன், மாநில குழு உறுப்பினர் எஸ்.பாரதி, மாவட்ட நிர்வாகிகள் துரை சங்கர், அர்ஜுன், கிருபா ஸ்ருதி, அன்பர சன், மணிபாரதி, நிசார் அகமது, விவேகானந்தன், ராஜா, கோகுல் கிருஷ்ணன், சனோஜ், பாலகிருஷ் ணன், கவி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்கள் ஒற் றுமை, சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காங்கேயம் பொன்னி நகரில் சமத்துவப் பொங்கல் மக்கள் ஒற்று மைத் திருவிழா புதன்கிழமை கொண் டாடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இவ்விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட் டதுடன், குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் கருவம்பாளையம் மற்றும் தென்னம்பாளையம் கிளைகள் சார் பில் சமத்துவ பொங்கல் விழா சிறப் பாக நடைபெற்றது. அதேபோல் நெருப்பெரிச்சல் திருமலை நகர், திருப்பூர் குமரானந்தபுரம், வேலம் பாளையம் பிடிஆர் நகர், வடக்கு ஒன்றியம் ஆத்துப்பாளையம் உள் ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா சிறப் பாக நடத்தப்பட்டது. அனைத்துப் பகுதிகளிலும் பொங் கல் வைத்து பொது மக்களுக்கு வழங் கப்பட்டது. குழந்தைகள், இளைஞர் கள், பெண்களுக்கான விளையாட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கப்பட் டன. இதேபோல் அவிநாசியிலும் மாதர் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.