உதகை,பிப்.27- கூடலூர் தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து வியாழனன்று இளையோர் நாடாளுமன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பங்கஜ்குமார் தலைமை தாங்கினார். கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ், நேரு யுவகேந்திரா அலுவலக உதவியாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்பயிற்சி மைய மூத்த பயிற்றுனர் மாதை யன் வரவேற்று பேசினார். முன்னதாக, கூடலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் புகழேந்தி பேசும்போது, இன்றைய சூழ்நி லையில் மாணவர்கள் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட நவீன உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தி வருகி றார்கள். உலக சூழலுக்கு ஏற்ப நமக்கு தேவையான செய்தி களை உரிய நேரத்தில் அறிந்து கொள்ள உதவுகிறது. ஆனால் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவது உடல் நலம் மற்றும் மன ரீதியான பல பாதிப்புகளை ஏற்படுத் துகிறது. மேலும் மனிதர்களின் சிந்தனை ஆற்றலை முடக்கி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து தவ றான வழிகளுக்கு கொண்டு செல்லவும் செய்கிறது. ஆகவே, செல்போன் பயன்பாட்டில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தவறானவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து, கூடலூர் காசிகா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுரேஷ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் சுந்தர லிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் நேரு யுவகேந்திரா கூடலூர் பகுதி அமைப்பாளர் பூபாலன் நன்றி கூறினார்.