மேட்டுப்பாளையம், டிச.11- மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுபாலத் தில் செல்பி எடுக்கும் பொழுது ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலியான சம்பவம் அப்பகு தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூர் பாலமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (30). இவர் தனது நண்பர்க ளுடன் மேட்டுபாளையம் பத்தரகாளியம்மன் கோயி லுக்கு வந்துள்ளார். அப்போது பவானி ஆற்றுபாலத் தின் நடைமேடையை ஒட்டி உள்ள தடுப்பின் மேல் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்த இளங்கோ நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.