tamilnadu

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

கோவை, ஏப். 25-கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை ராமநாதபுரம் காவல்நிலையசரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்த டி.ஜி.வாசு (47) என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிரூ.500 பறித்துச் சென்றதாக பரத் காந்தி (23)என்ற இளைஞரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து, அவர் மீது பல்வேறுவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போதுகோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதி காவல்நிலையங்களில் பரத் காந்தி மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே,தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் மாநகர சட்டம் ஒழுங்கு தெற்கு உதவிஆணையர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், இளைஞர் பரத் காந்தியை குண்டர் தடுப்புக் காவலில் ஓராண்டு சிறை வைக்க கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.