பெரம்பலூர், ஜூன் 11- பெரம்பலூர் நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு உரிய நேரத்திற்குள் ஊதியம் வழங்க கோரியும், பிடித்தம் செய்த சேமநல நிதியுடன், நகராட்சி நிர்வாகம் செலுத்தும் சேமநல நிதி குறித்த விபரங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர் 150-க்கும் மேற்பட்டவர்கள் செவ்வா யன்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து நகராட்சி ஆணையர்(பொ) ராதா மற்றும் துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை களை மனுவாக அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்ப தாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தபின் அவர்கள் கலைந்து சென்றனர்.