tamilnadu

img

காங்கயத்தில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணி

மாவட்ட  ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருப்பூர், அக். 13- காங்கயத்தில் நீர்நிலைகளை சீர மைக்கும் பணியினை மாவட்ட ஆட்சி யர் தொடங்கி வைத்தார். காங்கயம் வட்டம், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட அகிலாண்ட புரம், பதுமன்குளத்தினை தன்னார் வலர் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் சீரமைக்கும் பணி சனியன்று தொடங்கியது. காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு முன்னிலை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன்  துவக்கி வைத்து பேசுகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள குளங் கள் மற்றும் ஏரிகளை தூர்வாரி மேம் படுத்தும்பணியினை மேற்கொண்டு  பராமரித்திட அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் ஈடுபட வேண்டும்.  இதன்மூலம் நமது மாவட்டம் பசுமை மிக்க மாவட் டமாக திகழந்து  நமது காலத்தில் நாம் அனைவரும் இயற்கை வளங் களை பாதுகாக்க முன்வரவேண்டு மென தெரிவித்தார்.  இந்நிகழ்வின் போது, காங்கயம் வட்டாட்சியர் புனிதவள்ளி, காங்கயம் நகராட்சி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ்,  வேர்கள் அமைப்பு நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.