tamilnadu

img

சர்வாதிகாரத்தை முறியடிப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்

இடதுசாரி கட்சிகள் பிரச்சார இயக்கம்


ஈரோடு, அக். 15- சர்வாதிகாரத்தை முறியடிப்போம், ஜனநாய கத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து ஈரோடு மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை களை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை முறியடிப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சி கள் சார்பில் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, பவானி தாலுகா பகுதியில் நடைபெற்ற வாகன பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் ஜெகநாதன், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே.எம்.கோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எஸ்.மாணிக்கம், சந்திரசேகரன், மாதவன், சிபிஐ சார்பில் மாதேஸ்வ ரன், பாமா, பாலமுருகன், எஸ்.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் எஸ்.சி.நடராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார்  ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பிரச்சார இயக் கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்டக் குழு  உறுப்பினர் கே.ஆர்.திருத்தணிகாசலம், நகர செய லாளர் பி.வாசுதேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜி.வெங்கடா சலம், ஸ்டாலின் சிவக்குமார் ஆகியோர் கோரிக் கையை விளக்கி பேசினர். இதேபோல், பெருந்துறை பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரம சிவம், மாவட்ட குழு உறுப்பினர் கே.ரவி, தாலுகா செயலாளர் குப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.எம்.துளசிமணி, ஒன்றிய துணைச் செயலாளர் உமாநாத்  உட்பட பலர் பங்கேற்றனர்.