தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை கிராமத்தில் உள்ள அதியமான் கோட்டத்தில் வள்ளல் அதியமான் அவ்வையார் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.