சேலம், நவ. 4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத் தையொட்டி சேலம் மாநகர வடக்கு சாமிநாதபுரம் கிளை கள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினம் நவ.3 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நெல்லை அசோக் நினைவாக வாலிபர் சங்கத்தின் சேலம் மாநகர வடக்கு சாமிநாதபுரம் கிளைகளின் ரத்ததான கழகம், திரைப்பட ஆளுமைகள் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், ரசிகர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. வாலிபர் சங்க பகத்சிங் கிளை தலைவர் எம்.சிபி தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேகுவேரா கிளை செய லாளர் கே.நாகராஜ் வரவேற்புரையாற்றினார். சங்க கொடியை வடக்கு மாநகர தலைவர் பி. சதீஷ்குமார் ஏற்றி வைத்தார். மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து ரத்ததான முகாமை வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எம். கற்பகம் துவக்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் மலைவாழ் இளைஞர்கள் சங்க செயலாளர் என்.பிரவீன் குமார், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்முகாமில் திரளானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். இதைத்தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றோருக்கு மரக்கன்றுகள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.