tamilnadu

img

வாலிபர் சங்கத்தினர் ரத்த தான முகாம்

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகரக் கிளை மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் சனியன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின்  மாநில குழு உறுப்பினர் எம்.கற்பகம், மாவட்டப் பொரு ளாளர் வெங்கடேஷ், வடக்கு மாநகரத் தலைவர் சதீஷ் குமார், செயலாளர் ஆர்.குருபிரசன்னா, பொருளாளர் மனோகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், மாதர் சங்க முன்னாள் மாநில செய லாளர் கே.ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.