தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அரசு சமுதாய உடல் நல மையத்தில் ரத்த தானம் வழங்கும் முகாம் நடை பெற்றது. இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எம். சிவகுரு ரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார். மாரண்ட அள்ளி அரசு உடல்நல மையத்தின் மருத்துவ அலுவலர் மருத்துவர் எம். ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் இருந்து 50 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.