tamilnadu

img

மேலூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு

மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அ.வலையபட்டி கிராமத்தில் திங்கள் அன்று காலை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி தலைமையில் வாக்குச் சேகரிப்பை துவங்கினார்.வாக்குச் சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, ஆர்.மனோகரன், கே.ராஜேந்திரன், மேலுர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் என்.பழனிச்சாமி, எஸ்.பி.மணவாளன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்தின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா.காளிதாஸ், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.மார்நாடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அலங்கை செல்வஅரசு, தொகுதி பொறுப்பாளர் பாண்டியம்மாள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அ.வலையபட்டியில் துவங்கிய பிரச்சாரம் அழகர்கோவில், அழகாபுரி, உப்போடையபட்டி, கிடாரிபட்டி, செட்டியார்பட்டி, புலிப்பட்டி, ஏ.டி.காலனி, ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, அரசப்பன்பட்டி, கல்லம்பட்டி, சூரக்குண்டு, வாச்சம்பட்டி, கீழவளவு, மலம்பட்டி. செம்மினிபட்டி, சருகுவளையபட்டி, தனியாமங்கலம், ஆட்டுக்குளம் உள்ளிட்ட 50 கிராமங்களில் சு.வெங்கடேசன் வாக்குச் சேகரித்தார்.வாக்குச் சேகரிப்பின்போது பேசிய சு.வெங்கடேசன் நூறு நாள் வேலையினை 200 நாட்களாக உயர்த்துவோம் அதை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவோம் என்றார். விவசாய கடன் மற்றும் விவசாய நகைக்கடன் ஆகியவைகள் ரத்து செய்யப்படும், மேலூர் கடைமடை பகுதி பாசனத்திற்கு வருடம் தோறும் குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதற்கு உத்தரவாதம் செய்யப்படும் என்றார்.


படங்கள்: ஜெ.பொன்மாறன்