tamilnadu

img

ஒற்றுமை உணர்வுக்கா? கலவர சூழலுக்கா?

தென்மேற்கு பருவ மழையின் இதமான சாரலில் திளைத்து நிற்கும் அழகிய நகரம் கோவை. பணமதிப்பி ழப்பு  மற்றும் திணிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் தொழில்கள் தள் ளாடிக் கொண்டிருந்த நேரத்தில், உற் பத்திப் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தது. அதன் விளைவாய் உற்பத்தி சரிந்து பல நிறு வனங்களில் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து கொண்டிருந்த நேரத் தில் கொரோனா பரவத்தொடங்கி யது. ஏற்கனவே, மத்திய அரசின் குள றுபடியான பொருளாதாரக் கொள் கைகளால் வாழ்வு மூழ்கிக் கொண்டி ருந்த பொழுது முன்னறிவிப்பற்ற ஊர டங்கு வாழ்வாதாரத்திற்காய் போரா டிக் கொண்டிருந்த மக்களின் மேல் பேரிடியாய் வந்து இறங்கியது.  

ஒருபுறம் நோய் பற்றிய அச்சமும், இன்னொருபுறம் எதிர்காலம் பற்றிய பயமும் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில், கோவை போன்ற தொழில் நகரங்களில் தொழில் நெருக் கடி அதிகமாகிக் கொண்டிருந்த நேரத் தில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  60 நாட்கள் யுகமாய் கடந்திருக்க, தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு  கொண் டிருக்கிறது. இனி‌ தொழிற்கூடங்கள் இயங்கத் துவங்கும், வியாபாரமும் அப்படியே துவங்கும் எப்படியோ பிழைத்து கிடக்கலாம் என்று நம் பிக்கை மக்களிடம் ஒளி கொள்ளும் நேரத்தில் தான்,  கோவையில் உள்ள சலிவன் வீதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபால சுவாமிகள் கோவிலின் முன் இறைச்சி வீசப்பட்டதாக செய்தி வரு கிறது.

செய்தி கிடைத்த ஒரு மணி நேரத்தில் இந்து முன்னணியினர் அந் தக் கோவிலின் முன்பு கூடுகின்றனர். ஊரடங்கு உத்தரவுகள் நடைமுறை யில் உள்ள நிலையில் 500 -க்கும் மேற் பட்ட இந்து முன்னணியினர் தனி மனித இடைவெளியை எல்லாம் காற் றில் பறக்கவிட்டு, ஒன்றுகூடி பதற் றத்தை உருவாக்குகின்றனர்.  செய்தி பரவத் தொடங்கிய உடனே கோவை முழுவதும் பதட்டமும் பரவத் தொடங் குகிறது. இனி என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடு கடைகள் நடத்துவோர், வியாபாரிகள், சிறு,குறு தொழில் நிறு வனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பீதியோடு நிமிடங் களை நகர்த்துகின்றனர். காவல் துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஒரு சில மணிநேரத்தில் இறைச்சி வீசியவர் என்று ஒருவரை காவல்துறை கைது செய்கிறது. அவர் பெயர் ஹரி என்றும் அவர் மன அழுத் தத்தில் இருந்ததால் இதை செய்தார் என்றும் காவல்துறை தெரிவிக்கிறது. 

வேடிக்கை பார்த்தது ஏன்?

அதாவது, கவுண்டம்பாளையத் தில் இருந்து வந்த அவர் அங்கிருந்து கோவை நகரின் தெற்குப் பகுதியில் உள்ள சலிவன் வீதியில் உள்ள கோவிலை தேடிப்பிடித்து மன அழுத் தத்தை இறக்கி வைத்து விட்டு சென் றிருக்கிறார் என்று காவல்துறை சொல்கிறது. மேலும் கைது செய்யப் பட்டவர் பெயரைத் திரும்பத் திரும் பச் சொல்வதன் மூலமாக அமைதியை உருவாக்க முயற்சி செய்கிறது. இந்நி லையில், கைது செய்யப்பட்டவரின் முழுப் பின்னணியும் காவல்துறை வெளியிட மறுப்பது ஏன்? வெளிப் படையான விசாரணை நடத்திட இதில், எது தடையாக இருக்கிறது? கோவையின் வடக்குப் பகுதியில் இருந்து  தெற்கு பகுதிக்கு வந்து மக்கள் நெருக்கடி மிகுந்த ஒரு இடத்தில் ஒரு குற்றச்செயலை தனி ஒருவரால் செய்து விட்டு போய் இருக்க முடி யுமா? பின்னணியில் யார் இருக்கி றார்கள் என்பது குறித்து  விரிவான, விசாரணை வேண்டாமா?  சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் ஒரு மணி நேரத்தில் ஊரடங்கு காலத்தில் 500 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் அங்கு கூடியது எப்படி? காவல்துறை அவர்களை ஏன் அனுமதித்தது? தனிமனித இடை வெளியை கடைப்பிடிக்காமல் 5 பேருக்கு மேல் சென்றால் லத்தியை சுழற்றிய  காவல்துறை 500 பேரை வேடிக்கை பார்த்தது ஏன்? அவர் களை அங்கு ஒன்று திரட்டிய இந்து முன்னணி அமைப்பினர் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் காமல் இருப்பது ஏன்? இந்த கேள்வி களுக்கெல்லாம் காவல் துறையும், அரசு நிர்வாகமும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலும் கடமை யிலும் இருக்கின்றன.

அமைதி சிதைப்பு - வன்முறை வெடிப்பு

வளர்ந்து கொண்டிருந்த தொழில் நகரமாக கோவை எப்போதும் இருந்து வந்திருந்த நிலையில் 1995 -க்கு பிறகு  மத வன்முறைகள் படிப் படியாக துவங்கி 1997ல் கலவரம், 19 98ல் குண்டுவெடிப்பு  என கோவை யின் அமைதி சிதைக்கப்பட்டது. இச் சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட் டோர் இரு தரப்பிலும் உயிரிழந்த னர். மேலும் இதனால் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள வியாபார மும், தொழிலும் பறிபோயின.  இவ்வா றாக துடிப்பான நகரம் களையி ழந்து, தொழில் வியாபாரத்தோடு அமைதியையும், நல்லிணக்கத்தை யும் இழந்து தள்ளாடியது.  இதற்குப்பி றகு பத்தாண்டு காலத்திற்குப்பின் மீண்டும் தன் பழைய பொழிவை பெற் றிருந்த சூழலில் மக்களின் உழைப்பா லும், ஒற்றுமை உணர்வாலும் மீண்டு எழும்போது தான்,  2016, செப்டம்பரில் இந்து முன் னணி நிர்வாகி சசிகுமார் மரணத்தை யொட்டி மீண்டும் வன்முறை வெறி யாட்டம் உயிர்பெற்றது. அச்சம்பவத் தால் மூன்று நாட்களாக நகரத்தின் இயக்கம் முடக்கப்பட்டதோடு பல நூறு கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன நகரமே அச்சத்தில் உறைந் தது.

இந்நிகழ்வுகளில் இந்து முன் னணி மற்றும் பிஜேபியின் மாநிலத் தலைவர்களே வன்முறையை தூண் டும் பேச்சுகளை தொடர்ந்து பேசி னர். அனைத்து கட்சிகளும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பிஜேபி தலைவர்கள் மட்டும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறாக கல வரங்கள், வன்முறைகளிலேயே தங் கள் அரசியல் ஆதாயங்களை பார்த்து பழகிப் போயினர் பிஜேபியினர்.

தாங் கள் வலுவாகக் காலுன்றவும் தங்க ளின் அதிகாரத்தை பரவலாக விரி வுபடுத்தவும் தங்கள் தவறுகளை திசை திருப்பவும் கலவரத்தினை தங்கள் ஆயுதமாக அவர்கள் மாற்றிக் கொண் டனர். இந்நிலையில்தான் சாதாரண மக்களாகிய நாம் இன்னொரு கல வரத்தை கோவை தாங்குமா என சிந் திக்க வேண்டும்.  அமைதி குலைந்த  எந் நேரமும் பதட்டம் நிலவுகிற ஊரில் யார் தொழில் செய்ய வருவார்? வியா பாரம் எப்படி நடக்கும்?. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் அதை நம்பி பிழைக் கின்ற லட்சக்கணக்கான மக்கள் எங்கு போவார்கள்? என்பதையும் நாம் சிந் திக்க வேண்டும்.

கலவரத்தை உருவாக்க காத்திருக்கும் கூட்டம்

இந்துக்களின் வாழ்வாதாரம் பாது காக்கப்பட வேண்டும் எனப் பேசும் பிஜேபியினர், லட்சக்கணக்கான இந்துத் தொழிலாளர்கள் வட இந் தியா நோக்கி சாலைகளிலும்,  ரயில் தண்டவாளத்திலும் நடந்தே சென்ற போது இவர்களின் கவனம் அங்கு ஏன் திரும்பவில்லை. ஊரடங்கில் வேலையிழந்து தவிக் கும் நேரத்திலும், அடாவடி வசூலில் ஈடுபடும் மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்களின் கெடுபிடியால் இந்துப் பெண்கள் விழிபிதுங்கி நிற்பது இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், கோவிலின் முன் இறைச்சி வீசப்பட்டதாக செய்தி வந்தவுடன் ஒரு மணிநேரத்தில் 500 பேர் கூடிய தோடு காவல்துறை உரிய விசா ரணை நடத்துகிறோம் என்று உறுதி யளித்த பிறகும் இவர்கள் கலைய வில்லை. நகரம் முழுவதும் பதட் டத்தை உருவாக்கி ஹரி என்பவர் கைது செய்யப்பட்ட பிறகே கலைந்து செல்கின்றனர். இவ்வாறாக கலவ ரத்தை உருவாக்க ஒவ்வொரு நிமிட மும் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பிற மதத்தி னர் மீது வெறுப்பினை அனைத்து காலங்களிலும் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
 

நாம் என்ன செய்ய போகிறோம்?

கோவையின் அமைதியை சீர் குலைத்தும் சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து சிதைத்து வரும் நடவடிக் கையில் ஈடுபட்டுவரும் சமூக விரோ திகளை தனிமைப்படுத்த வேண்டும். கோவை மாநகரின் வளர்ச்சியில் இவர்கள் பங்கு எப்போதும் இருந்த தில்லை. ஆனால் நகரின் வளர்ச்சி பின்னுக்கு போகும் போதெல்லாம் அதன் காரணமாக இவர்கள் இருந் துள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடாது என்று நினைப்பவர்களை நாம் புறக்க ணித்து கோவையின் மேன்மையை பாதுகாக்க வேண்டும்.

பாரபட்சமும் பவ்யமும்

துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற திமுகவின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட் டார். எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்று வதை கண்டித்து சமூக இடைவெளி விட்டுப் போராடிய தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊரடங்கு காலத்தில் தவணைத் தொகை கட்ட வேண்டியதில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை மீறி கடன் தவணைத் தொகையை வசூலித்த பஜாஜ் பின்சர்வ் நிறுவ னத்தைக் கண்டித்துப் போராடிய பொது மக்களை வழக்கு போடுவ தாகச் சொல்லி மிரட்டி கலைத்தது காவல்துறை. ஊரடங்கால் வாழ்வி ழந்து கிடக்கிற ஆட்டோ தொழிலா ளர்கள், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தபோது, ஊர டங்கு விதிமுறைகளை மீறுவதா கவும் வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டியது கோவை மாநகர காவல் துறை.

அதேநேரத்தில் கோவை சலி வன் வீதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவிலின் முன் இறைச்சி வீசப்பட்டது என்ற தகவல் பரவி ஒரு மணிநேரத்தில் 500 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கூடியபோது குற்றவாளிகளை தேடிக்கொண்டிருக்கிறோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மன்றாடியதே தவிர மிரட்டலோ, வழக்குப்பதியும் நடவ டிக்கையோ எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. இவ்வாறாக மற்ற அமைப்புகள் போராட்டத்திற்கு வரும்போது அடக்குமுறை ஆயு தத்தை கையில் எடுக்கும் காவல் துறை, இந்து முன்னணி வீதிக்கு வந் தால் பவ்யம் காட்டுகிறது.

இந்த பார பட்ச நடவடிக்கைதான் அவர்களை சகல சட்ட விதிகளையும் மீறிட உற் சாகத்தை அளிக்கிறது. அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. இதற்கு ஒரு உதாரணமே, ஊரடங்கு நடை முறையில் இருக்கும் போதும் 500 பேருக்கு மேல் சமூக இடைவெளி எது வுமில்லாமல் கூடி பதட்டத்தை உரு வாக்கி பிறகு, தங்கள் நோக்கம் நிறை வேறவில்லை என்ற உடன் கலைந்து செல்கிறார்கள். சட்டவிதிகளை அப் பட்டமாக மீறும் சுதந்திரத்தையும் தைரியத்தையும் அவர்களுக்கு  ஊட்டி வளர்க்கிறது கோவை மாநகர காவல் துறை. 

எப்பக்கம்

மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே கோவையில் டெல்லி பாணியில் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்த இந்து முன்னணி தகுந்த நேரம் பார்த்து காத்திருக் கிறது. ஊரடங்கு அறிவிப்பு வருவ தற்கு முந்தைய வாரம் கோவை யினை பெரும் கலவர மேகங்கள் சூழ்ந்து கிடந்தன.  கொரோனா பர வல் தீவிரத்தால் திசை மாறிய அம் மேகங்கள், இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் தற்போதைய நிலை யில் மீண்டும் கோவையை சூழத் துவங்கியுள்ளன.  இருப்பினும் டெல்லி பாணி கல வர வன்முறை வெறியாட்டத்தை அவர்கள் நிகழ்த்திட முயற்சிக்கும் போதெல்லாம் மக்கள் தங்கள் ஒற் றுமை உணர்வால் அதை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். ஒற்றுமை உணர்வை வெறுப்பு அரசியல் மூலம் சீர்குலைக்க இந்துவெறியர்களால் கடும் முயற்சி எடுத்து வரப்பட்ட போதெல்லாம் மக்கள் தங்கள் ஒற் றுமை உணர்வை வெளிப்படுத்தி வரு கிறார்கள். இந்நிலையிலும் மக்கள், கோவை மாநகரக் காவல்துறையிடம் முன்வைக்கும் கேள்வி இதுதான். காவல்துறை யார் பக்கம் நிற்கப் போகிறது? ஒற்றுமை உணர்வோடு உள்ள மக் களோடா?  அல்லது கலவர பெரும்பசி யோடு  காத்துக்கிடக்கும் காவி கூட் டத்தோடா ?

- கே.எஸ்.கனகராஜ், (கோவை மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)