tamilnadu

கடலூர் ஆட்சியர் வளாகத்தில் இருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கடலூர், டிச.9- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மக்கள் குறை கேட்பு கூட்டத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.  இந்நிலையில், திங்களன்று(டிச.9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த  மணிகண்டன் என்பவர் என்எல்சியில் ஓட்டுநர்  வேலைக்காக கீழக்கரையைச் சேர்ந்த ராஜ மோகன் அவரது மனைவி வானதியிடம் 2018 ஆம் ஆண்டு 3 லட்சம் பணம் கொடுத்துள்  ளார். இதுவரைக்கும் வேலையும் வாங்கித் தரவில்லை. பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் மண்ணெண் ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியி லிருந்த காவலர் அவரை தடுத்து நிறுத்தினர். இதேபோல் சிங்காரி சிதம்பரம் அருகே உள்ளவர் இவர் வாகன விபத்தில் தனக்கு உரிய பணத்தை வழக்கறிஞர் சிவமணி பெற்றுத் தரவில்லை என்று கூறி அவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவர்கள் இருவரையும் விசாரணைக்காக புது நகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்  சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவல கத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.