tamilnadu

img

சந்தன மரம் வெட்டி கடத்தியதாக இருவர் கைது

தருமபுரி, அக்.6- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மொரப்பூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், கவுரமலை காப்புக்காட்டில் மொரப்பூர் வனச் சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்துப் பணி யில் ஈடுபட்டனர். அப்போது, வனப் பகுதியில் ஒரு கும்பல் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வனத்துறை யினர் சோதனை செய்ததில் 5 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனத்துறையினர் விரட்டி சென்று இருவரை பிடித்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசா ரணையில், வாச்சாத்தி அருகேயுள்ள மல்லங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் முத்து (40), குப்பன் மகன் பிரபு (30) என்பது தெரியவந்தது. இருவரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 67 கிலோ எடையுள்ள ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சந்தன மரங்கள் மற்றும் ஒரு இருசக்கர வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர் புடைய பாப்பிரெட்டிப்பட்டி வட்டா ரப் பகுதியைச் சேர்ந்த பெருமாள், வெங்கடேசன், தீர்த்திகிரி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர் களை தேடி வருகின்றனர்.