tamilnadu

img

தொழிற்சங்க தலைவருக்கு கௌரவிப்பு

கோவை, பிப். 23 –  கோவையில் மூத்த தொழிற்சங்க தலை வர் கே.சிவசாமியை தொழிற்சங்க முன்னோ டிகள் மற்றும் தொழிலாளர்கள் ஞாயிறன்று கௌரவித்தனர். கோவை மாவட்டத்தில் இன்ஜினியரிங் தொழிற்சங்க தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர் கே.சிவசாமி. இவர் டெம் நிறுவனத்தில் தொழிலாளியாகவும், தொழிற்சங்க தலைவராகவும் செயல்பட் டார். சிஐடியு நிர்வாகக்குழு உறுப்பி னராகவும் கே.சிவசாமி சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றினார். செங்கொடி இயக் கத்தின் வளர்ச்சியில் தன்னுடைய பங் கினை திறம்பட செலுத்தியுள்ளார். இந்நி லையில் 83 வயதை கடந்த கே.சிவசாமி யின் தொழிற்சங்க அனுபவத்தை பகிரும் வகையில் கௌரவிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.  கோவை உடையாம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொழிற்சங்க தலைவர்கள் யு.கே. வெள்ளிங்கிரி, தொழிற்சங்க இயக்கத்தில் இவருடன் பணியாற்றிய தொழிற்சங்க முன் னோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பங் கேற்றனர். இதில், அன்றைய நாட்களில் தொழிலாளர்களின் நிலை, அவர்களின் உரி மைக்கான போராட்டம், வெற்றி கிட்டும் வரையிலான தொழிற்சங்கத்தின் போராட் டம் ஆகியன குறித்து தங்களது இனிய நினை வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த கௌர விப்பு நிகழ்வில் கே.சிவசாமி மற்றும் இவரது இணையர் எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவரான தோழர் ஆர்.வெங்கிடு அவர்களின் மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.