tamilnadu

img

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

திருவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர்ந்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிற தூய்மைப் பணியாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கைத்தறி துண்டுஅணிந்து கௌரவிக்கப்பட்டனர் .நகராட்சி நிர்வாகத்தில்   பணிபுரியக்கூடிய எண்பது தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவனமான எக்ஸ்னோரா மூலம் பணிபுரியக்கூடிய 100 தொழிலாளர்கள்என மொத்தம் 180 தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை மாவட்டத் தலைவர் மகாலட்சுமி ,மாவட்ட செயலாளர் பி.என் .தேவா ,சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் ,பிச்சைக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்