நாகர்கோவில், ஆக.25- அரசு போக்குவரத்து கழகங்களை தனியார்மயப் படுத்தும் நடவடிக்கையை கண்டித்தும், தனியாரிடம் பேருந்தை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும், அனைத்து பொதுத்துறைகளை யும் தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசையும் துணைபோகும் மாநிலஅரசையும் கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று நாகர்கோவில் இராணித்தோட்டம் போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச நிர்வாகி கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக் குமார், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, எச்எம்எஸ் நிர்வாகிகள் முத்துகருப்பன், சுப்பிரமணிய பிள்ளை, டிடிஎஸ்எப் நிர்வாகி சண்முகம், எஐடியுசி நிர்வாகி நீலகண்டன் ஆகியோர் பேசினர். இதில் சிஐடியு நிர்வாகி எப்.எஸ்.எ.லியோ, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் நலசங்க மாவட்ட செயலாளர் எம்.சுந்தர் ராஜ் ஆகியோர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.