சேலம், ஜூலை 8- உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள் ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதிய அர சாணை அறிவித்தலின்படி ரூ.510 வழங்கிட வேண்டும். காண்ட் ராக்ட் தினக் கூலி தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துப்புரவு பணியில் தனி யார் மயத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். மக்கள் தொகை வளர்ச்சி ஏற்ப கூடுதல் துப்புரவு தொழிலாளர்களை நிய மனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர் களுக்கு பணி கொடையாக ரூ.50 ஆயிரம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு அரசாணையின்படி சம்ப ளம் நிலுவை தொகை குறித்த பணப்பலன்களை ஆப்ரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.கோவிந்தன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. தியாகராஜன், ஆர்.வெங்கடபதி, மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ மாவட்டத் துணைச் செயலாளர் சி.கருப்பண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் வி.கண்ணன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. முருகேசன் முன்னிலை வகித் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகே சன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுச் சாமி, மாவட்ட பொருளாளர் கு.சிவராஜ், சங்க உதவிச் செய லாளர் ஸ்டெல்லாமேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஏ. ரங்கசாமி வாழ்த்தி பேசினார். இதில் நகராட்சி, பேரூராட்சி ஒப் பந்த தொழிலாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக் கல் மாவட்ட ஆட்சியர் உத்தர விட்ட குறைந்தபட்ச சம்பளத்தை தாமதமின்றி நிலுவை தொகையு டன் வழங்க வேண்டும். வருங் கால வைப்பு நிதி பிடித்தம் செய்து உரியகணக்கில் செலுத்த வேண்டும். இஎஸ்ஐ திட்டத் தின் மூலம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.