tamilnadu

 உக்கடம் மேம்பால கட்டுமான பணிக்காக போக்குவரத்து மாற்றம்

கோவை, மே 26-கோவையில் மேம்பாலக் கட்டுமான பணிக்காக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நிறுத்தப்பட்ட தூண்களின் மீது கட்டுமானப்பணி இன்று முதல் (மே 27) தொடங்க இருக்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், பணிகளை விரைந்து முடிப்பதற்காகவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பேருர் புறவழிச்சாலை, சேத்துமாவாய்க்கால் சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, சுண்ணாம்பு வாய்க்கால் வழியாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளுக்கு சென்றடையலாம். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.