tamilnadu

மக்காச்சோள பயிரில் படைப்புழு குறித்த இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கோவை, ஆக. 4- மக்காச்சோள பயிரில் படைப்புழு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி கோவையில் திங்களன்று (இன்று) நடைபெறுகிறது. மக்காச்சோள பயிரை கடந்தாண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்கியதில் பல ஆயிரம் ஏக்கரில் மக்காச் சோளப்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் மகசூல் வெகுவாக குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இந்த நிலையில், நடப்பாண்டிலும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இந்த படைப்புழு தாக்குதல் கண்ட றியப்பட்டுள்ளதாக வேளாண் விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். கடந்தாண்டு தாக்குதலில் கோவையில் உள்ள சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தான் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக படப்புழு மேலாண்மை குறைத்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆக.5 ஆம் தேதி (இன்று) சுல்தான்பேட்டையில் உள்ள பாலாஜி மஹாலில் விவசாயிகள் மேளா நடைபெற உள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரி சக்திவேல் கூறுகையில், வேளாண்பல்கலை மற்றும் வேளாண்மை துறை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 12 வேளாண் வட்டாரங்களில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் படைப்புழு தாக்குதல் குறித்த செயல் விளக்கங்கள் நடக்கிறது. மேலும், படைப்புழு மற்றும் அதனை தடுப்பது குறித்த கண்காட்சி கருத்தங்கு இடம்பெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மாலை 3 மணி வரை நடைபெறும் என்றார்.