கோவை, ஜூன் 4 – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இன வெறி கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் டிரம்ப் உருவப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை அந்நாட்டு காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்தனர். இன வெறி நடவடிக்கையின் ஒருபகுதியாக நடை பெற்ற இந்த படுகொலையை கண்டித்து உல கெங்கிலும் கண்டன இயக்கங்கள் நடை பெற்று வருகிறது. குறிப்பாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்க மக்கள் எழுச்சிகரமான போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இனவெறிக்கெதிரான அமெரிக்க மக்கள் நடத்தும் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்தபுரத் தில் நடைபெற்ற போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எஸ். கனக ராஜ் , கிளைச் செயலாளர் முத்து முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உருவப்ப டத்தை கிழித்தும், இனவெறிக்கெதிரான அமெரிக்க அரசை கண்டித்தும் முழக்கங் களை எழுப்பினர்.