இதேபோல், திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட நிழலி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற னர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வழங்கிய பட்டாவிற்கான இடத்தை அளந்து கொடுக் காததால், அவ்விடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றனர். தாங்கள் அங்கு குடிசை அமைக்க சென்றால் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே பட்டா நிலத்தை அளந்து வழங்கும் வரை குடியேறும் போராட்டம் நடத்துவது என்று மாவட்ட ஆட்சியர கத்தில் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட னர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வா கம் உறுதி அளித்தது. எனவே தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.