ராணிப்பேட்டை, பிப். 3- உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறு வனத்தின் உயர்மின் கோபுரங்க ளால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக் கோரி ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமி கிராமத்தில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று அக். 18 அன்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆட்சியர் அளித்த உறுதி மொழி நிறை வேற்றப்படவில்லை. வரும் 20ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும். மேலும் திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைக்கும் கூட்டம் 11ஆம் தேதி ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் மாநிலத் தலைவர் பி.சண்முகம், பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த திட்டத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு உரிய நிவரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.