tamilnadu

img

கண்டுபிடிப்புக்குப் பரிசு மரண தண்டனை -

 மணிராம் தத்தா, அசாமைச் சேர்ந்தவர். மணிராம் தேவன் என மக்கள் மத்தி யில் போற்றப்பட்டவர். இந்தியாவில் தேயிலை யைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். அவர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தேயிலையை எப்படிப் பயிரிடுவது எனவும், அதனை எப்படி அருந்துவது எனவும் கற்றுக்கொடுத்தார். இவ்வாறு அவர் பிரிட்டிஷாருக்கு உதவிய தற்கு அவர்கள், அவருக்கு அளித்த பரிசு என்ன  தெரியுமா? மரண தண்டனை. அவர் நாட்டுப் பற்று மிக்கவராகவும், மாபெரும் விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்ததே அவர் செய்த  தவறு. இந்த சம்பவம் நடந்தது சுமார் 165 ஆண்டு களுக்கு முன்பு. அப்போது அசாம் ஒரு சுதந்திர  பூமியாக இருந்தது. 1823இல் ஸ்காட்டிஷ் வியா பாரி ஒருவர், ராபர் புரூஸ் என்பவர் அசாமுக்கு  வந்தார். மணிராம், அவரிடம் தேயிலை குறித்துக் கூறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, ராபர் புரூஸின் தம்பி சார்லஸ் அலெக்சாண்டர் புரூஸ் வந்தார். இருவரும் மணிராமை சந்தித்தார்கள். பின்னர் புரூஸ் சகோதரர்கள் தாங்கள்தான் தேயிலையைக் கண்டுபிடித்ததாகவும், எனவே  தங்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார்கள். இவ்வாறு தேயிலைக் கண்டுபிடித்ததற் கான விருதுக்கு மேலும் இருவர் போட்டியிட் டார்கள். குவஹாத்தியில் பிரிட்டிஷாரின் ஏஜண்டாக செயல்பட்டுவந்த கேப்டன் பிரான்சிஸ் ஜெர்கிஷ் என்பவரும், அஸ்ஸாம் ராணுவத்தில் பணியாற்றிவந்த லெப்டினண்ட் சார்ல்டன் என்பவரும் இவ்வாறு போட்டியிட் டார்கள். லெப்டினன்ட் சார்ல்டன், தான் தேயிலை யைக் கண்டுபிடித்ததாக கல்கத்தாவில் இருந்து வந்த வேளாண்மை சங்கத்திற்குத் தெரிவித் தார். இதனைக் கேள்வியுற்ற கேப்டன் பிரான் சிஸ் ஜெர்கிஷ், தானும் தேயிலையைக் கண்டு பிடித்ததாக, தேயிலைக் குழுவிற்குத் தெரி வித்து, அதற்காகத் தனக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரிட் டிஷ் அரசாங்கம் இருவருக்கமே விருதுகள் வழங்கியது.

இவற்றைக் கேள்விப்பட்ட சார்லஸ் அலெக்சாண்டர் புரூஸ் தேயிலைக் குழுவிற்கு, தேயிலையைக் கண்டிபிடித்ததற்காக, தனக்குத்தான் விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். எனினும் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் சார்லஸ் புரூஸ், தானும் தன் சகோதரரும் அசா முக்கு வந்தபோது தேயிலையைக் கண்டு பிடித்ததாகவும், தான்தான் முதன்முதலாக தேயிலைக் குழுவுக்கு இதுகுறித்துத்  தெரிவித்த தாகவும் கூறினார். எனினும் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் இதனை ஏற்கவில்லை. ஆனால் உண்மையில் தேயிலையைக் கண்டுபிடித்தது மணிராம் தேவன். இவர்தான்  தேயிலையை முதன்முதலில் கண்டுபிடித் தார். இவரிடமிருந்துதான் நான்கு வெளிநாட்டுக் காரர்களும் தேயிலையை எப்படிப் பயிரிடுவது என்பதையும், எப்படி அருந்துவது என்பதையும் தெரிந்துகொண்டார்கள். ஆனால் உண்மையி லேயே தேயிலையைக் கண்டுபிடித்த மணிரா முக்கு கிடைத்ததோ தூக்கு தண்டனையாகும். மணிராமுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது? இது குறித்துத் தெரிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்றாகும். உண்மையில் வெள்ளைக்காரர்களுக்கு ஆரம்பத்தில் தேயிலையையோ அல்லது பெட்ரோல் வளத்தையோ கண்டுபிடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. அசாம்  பிராந்தியம் அநேகமாக கண்டு கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. பர்மா இந்தப் பகுதியைத் தாக்கியபோது இங்கே ஆட்சி செய்துவந்தவர்கள், பிரிட்டிஷாரின் உதவியை நாடினார்கள். 1823 நவம்பரில் டேவிட் ஸ்காட் ராணுவத்தை அனுப்பினார். அப்போது அவர்,  “உங்கள் ஆட்சியை நீக்கிவிட்டு, எங்கள் ஆட்சியை இங்கே நிறுவ வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. பர்மா எங்கள் எதிரி. அவர்களை விரட்டியடிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்.” என்று கூறினார். பின்னர் 1826இல் பர்மா சரணடைந்தது. 1833இல் பிரிட்டிஷ் அரசாங்கம், சிவசாகர் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களை அரசர் புரந்தர் வசம் ஒப்படைத்தது. மணிராம், அரசருக்கு 1833 முதல் 1837 வரை அமைச்சராகவும் ராணுவ அதிகாரி யாகவும் இருந்தார். 1834இல் பெண்டிங் பிரபு வங்க ஆளுநராக  இருந்தார். அவர் அசாமில் தேயிலைத் தோட்டங் களுக்கான வாய்ப்பு வசதிகள் குறித்து ஆராய்வதற்காக ஒரு தேயிலைக் குழுவை அமைத்தார். இதனிடம் மணிராம் அஸ்ஸாமில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் குறித்து ஒரு மனு அளித்தார்.

அசாமில் தேயிலை மற்றும் எண்ணெய் வளங்கள் அபரிமிதமாக இருப்பதை அறிந்த  பிரிட்டிஷார் அதனைத் அசாமைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தீர்மானித்தனர். 1839இல் அரசர் புரந்தர் ஆட்சிக்கட்டிலிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இதன் காரணமாக அதுவரையிலும் அரசரின் அதிகாரப்பூர்வ ராணுவ அதிகாரியாக இருந்த  மணிராமின் பதவியும் பறிக்கப்பட்டது. அதன்பின்னர் மணிராம் இந்திய தேயிலைக் கம்பெனியின் அசாம் ஏஜண்டாக செயல் பட்டார். சுமார் ஆறு ஆண்டு காலம் செயல்பட்டு வந்த மணிராம் தேயிலை வர்த்தகத்தின்  தொழில் நுணுக்கங்களையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷாருக்குச் சொந்த மான இந்தியத் தேயிலைக் கம்பெனியிலிருந்து வெளியேறி சொந்தமாக தேயிலை வர்த்தகத்தைத் தொடங்கினார். இதனால் இந்தியத் தேயிலைக் கம்பெனியின் லாபம் கடுமையாகச் சரிந்தது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், இந்தியத் தேயிலைக் கம்பெனியின் முதலாளி களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். மணிராமின் நடவடிக்கைகளால் பிரிட்டிஷார் மணிராம் மீது  மிகவும் அதிருப்தி கொண்டிருந்தனர்.

மணிராம்  தேயிலை வர்த்தகத்தை தொடங்கி நடத்தி வந்த  அதே சமயத்தில் முன்னாள் அரசர் புரந்தர் சிங்குடனும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார். அசாம் மக்களும் அரசர் புரந்தர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டதால், பிரிட்டிஷார் மீது மிகவும் அதிருப்தி கொண்டி ருந்தனர். 1857இல் மணிராம் கவர்னர் ஜெனரலிடம் அரசர் புரந்தர் சிங் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக, கல்கத்தாவிற்குச் சென்றி ருந்தார். அதே ஆண்டு இந்திய முதல் சுதந்திரப் போர் என அறிவிக்கப்பட்ட சிப்பாய் கலகமும் நாடு முழுதும் வெடித்தது.  இது அசாமிலும் எதிரொலித்தது. மணிராம் கல்கத்தாவில் தங்கியிருந்தபோது புரட்சியாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். இது பிரிட்டிஷாருக்கும் தெரிய வந்தது. மணி ராம் தேவன்,

தன் நண்பர்களுக்கு எழுதிய ஒரு  கடிதம் கர்னல் ஹால்ரீடு என்பவர் கையில்  கிடைத்தது. அதில் மணிராம், பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துமாறும், பிரிட்டிஷா ருக்கு எதிராக கலகம் புரியுமாறும் தன் நண்பர்களுக்கு, அறைகூவல் விடுத்திருந்தார். இதனை அடுத்து மணிராம் தேவன் கைது செய்யப்பட்டார். மணிராம் தேவன் ஜோர்ஹாட் கொண்டுவரப்பட்டு, அவருக்கு எதிராக அவசரம் அவசரமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1858 பிப்ரவரியில் மணிராம் தேவன் தூக்கிலிடப்பட்டார். இப்போது அசாம் மாநிலத்தில் தேயிலை அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தேயிலை வர்த்தகத்தில் பிரிட்டிஷார், கொள்ளை லாபம் ஈட்டினார்கள். எனினும், மணிராம் நாட்டுப்பற்று மிகுந்தவராக  இருந்ததாலும், புரட்சியாளராக இருந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.

நன்றி: பப்ளிகேஷன் டிவிசன், சிறுவர்களுக்கான வரலாற்றுக் கதைகள்
தமிழில்: ச.வீரமணி