tamilnadu

img

100 வயதைக் கடந்து வாக்களித்த மூதாட்டி

அவிநாசி, ஏப். 18-அவிநாசி அருகே கருவலூரில் 100 வயதைக் கடந்தும்தனது மகனுடன் வந்து மூதாட்டி வாக்களித்தது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கருவலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கத் தொடங்கினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கருணையம்மாள் என்ற 100 வயது கடந்த மூதாட்டி தனது மகனுடன் வாக்களிக்க வந்தார். அவருக்கு வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் அனைவரும் வழிவிட்டு, வாக்களிக்க உதவினர். அதேபோல் ராமநாதபுரத்தில் கண்பார்வை இழந்த தனது மகன் ரங்கசாமியை 78 வயதான தாய் வாக்களிக்க அழைத்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.