tamilnadu

img

இலவச மடிக்கணினி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நாமக்கல், ஜூலை 1- இலவச மடிக்கணினி கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட மாணவர் கள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2017- 18 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தற்போது வரை தமிழக  அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.  இதனால் மேற்படிப்புக்கான தகவல்கள் முழுமை யாக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்களுக்கு உடனடியாக மடிக்கணினி  வழங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை யிட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதனால்  ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.