கோவை, ஜூலை 7- ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களை நகரத் தைவிட்டு வெளியேற்றும் நடவ டிக்கையை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகர பகுதிகளில் ஐம்பதாயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிசை மாற்று வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் குடியிருந்து வருகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக இம் மக்கள் குடிசை மாற்று வாரியத் தால் கடன் உதவி உள்பட பல வசதிகள் பெற்று வசித்து வரு கின்றனர். இந்நிலையில் இம் மக்களை நகரத்தை விட்டு வெளி யேற்ற மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற் போது உக்கடம், ஜீவாநகர், தடா கம் ரோடு உள்ளிட்ட பகுதிக ளில் இந்த அச்சுறுத்தல் நடவடிக் கைகள் தொடர்கிறது. கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு இது வரை யாருக்கும் நகரத்தில் பட்டா வழங்கப்படவில்லை. மாநகராட் சியோடு புதிதாக இணைக்கப் பட்ட பகுதிகளிலும் மாநகராட்சி என்கிற காரணத்தை சொல்லி பட்டா மறுப்பது என்பது நடந்து வருகிறது. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய, தாழ்த் தப்பட்ட உழைப்பாளி மக்கள் பல இடங்களில் குடியிருந்து வரு கின்றனர். நகரத்தை கட்டிய மைத்தும், இன்றுவரை தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் இம் மக்களுக்கு பட்டா வழங்காதது மட்டுமல்லாமல் அவர்களைக் காலி செய்கின்ற நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையும் நகரத்தைச் சார்ந்தே இருக்கிறது. கோவை நகரத்திற்குள்ளேயே அரசின் பிறதுறைகளின் காலி இடங்கள் ஏராளமாக உள்ளது. அங்கு இவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதைப் பற்றி சிந்திக் காமல் தாழ்த்தப்பட்ட மக்கள் தெற்கு திசையில் இருக்க வேண் டும் என்று எதன் அடிப்படை யில் திட்டங்கள் மேற்கொள் ளப்படுகிறது. தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் பொரு ளாதாரத்தை சீர்குலைக்கிற வகை யில் நகர்பகுதியில் இருப்பதை மறுத்து போக்குவரத்து வசதி யற்ற, கல்விக் கூடங்கள் இல்லாத இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு களில் இம்மக்களை அப்புறப் படுத்தும் நடவடிக்கையை வன் மையாகக் கண்டிக்கிறோம். அந்த மக்களை பொருத்தவரை அவர்கள் வாழ்கின்ற இடத்திற்குப் பட்டா வழங்கி, மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளோடு அங்கேயே வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். இதுதான் கோவையை நம்பி இருக்கிற உழைப்பாளி மக்களைப் பாதுகாக்கிற நடவடிக்கையாக இருக்கும். ஆகவே 30 ஆண்டுக ளுக்கு மேலாக குடியிருக்கிற மக்களுக்குப் பட்டா கொடுக் கிற ஏற்பாட்டை அரசு செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள் கிறோம். மாறாக வேறு காரணம் சொல்லி இம்மக்களை வெளி யேற்றும் அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையை ஒருகாலும் ஏற்கமுடியாது. இதுகுறித்து அனைத்துப் பகுதி மக்களிட மும் கலந்தாய்வு, களப்பணி மேற்கொள்வது என தீர்மானித் திருக்கிறோம். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களைத் திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போரட்ட நடவடிக்கையில் ஈடு படுவோம் என்பதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என பி.ஆர். நடராஜன் எம்.பி., தெரிவித்துள் ளார். முன்னதாக கோவை சித்தா புதூர், ஜீவா நகர், தடாகம் சாலை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் ஞாயிறன்று காந்திபுரத் தில் உள்ள சிபிஎம் அலுவல கத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து மாவட்ட, மாநகர நிர் வாகத்தால் தாங்கள் பாதிப்புக் குள்ளாகும் நிலை குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.