tamilnadu

img

மத்திய கல்வி நிறுவன ஆசிரியர் மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்புக! பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 2 - மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு) சட்டமுன்வடிவில் தலித்,பழங்குடியினர், பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மை  யினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று  மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலி யுறுத்தினார். 2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் திங்கள் அன்று இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கலந்துகொண்டு பேசிய தாவது: 2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறு வனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு) சட்டமுன்வடிவு மீதான விவா தத்தில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த மைக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவதாக, இந்தச் சட்டமுன்வடிவில் தலித்துகள், பழங்குடியினர், பொருளாதார ரீ தியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர் என்னும் சொற்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, உறுப்பினர்கள் ஆ.ராசா மற்றும் சுப்ரியா சுலே ஆகியோரின் கருத்துக்களுடனும் முழுமை யாக உடன்படுகிறேன். எங்கள் கட்சியின் சார்பில், இந்தச் சட்ட முன்வடிவு, முழுமையானதோர் ஆய்வுக் காக, நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன் கூறினார். ஆ.ராசா முன்னதாக இந்தச்சட்டமுன்வடிவின் மீது உரையாற்றிய திமுக உறுப்பினர் ஆ. ராசாவும் இதனைத் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண் டார்.