தருமபுரி, ஜூன் 9- தருமபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தருமபுரி நகரத்தில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தருமபுரி நகரம், எம்.ஜி.ஆர்.நகர், தருமபுரி பேருந்து நிலையம், கடை வீதி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தில் திமுக முன்னாள் நகரச் செயலாளர் சிட்டி முருகேசன், முன்னாள் கவுன்சிலர் பி.மோகன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் ரஹீம், துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்ல துரை, தங்கமணி, பிரோ ஜெகன், குமார், கோபி, சூர்யா உள் ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங் கேற்றனர்.