tamilnadu

img

காலமுறை ஊதியம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,டிச.12- காலமுறை ஊதியம் வழங்கக் கோரி ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலா ளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக்  ஊழியர்கள் வியாழனன்று கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்களை குறிவைத்து தாக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அனைத்து  கடைகளுக்கும் இரவு நேர காவலர் களை நியமிக்க வேண்டும்.  அனுமதி இல்லாமல் செயல்படும்  பார்களை நடத்துபவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சிசிடிவி கேமரா பொருத்தியதற்கும்,  கட்டிட வரைபட அனுமதி, கான் கிரீட் கூரை அமைத்திட செய்யப் பட்ட செலவு தொகையை ஊழியர் களுக்கு வழங்க வேண்டும். கடை களுக்கான மின் கட்டணத்தை மாவட்ட நிர்வாகமே நேரடியாக மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்  முன்பு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட துணைத் தலைவர் பொன்.பாரதி தலைமை வகித்தார். சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட தலை வர் எஸ்.சுப்பிரமணியன், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் என்.முருகையா, சம்மேளனத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.ஜான்அந்தோணிராஜ், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.சுப் பிரமணியன், ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.பாண்டியன், சங்கத் தின் மாவட்ட பொருளாளர் வி.ராஜேந் திரன் உட்பட திரளானோர் பங்கேற் றனர்.