tamilnadu

img

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 கோவை, டிச.11 –  இந்திய மக்களை மதரீதியாக பிரிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண் டித்து கோவையில் புதனன்று  அரசு கலை கல்லூரி முன்பு இந் திய மாணவர் சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பன்முகத்தன்மையோடு இந்திய ஒன்றியம் திகழ்கிறது. இந்த ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்த தொடர்ந்து மத்திய  பாஜக அரசு சூழ்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோ தாவை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மற் றும் தமிழர்களை தனிமைப்ப டுத்துவதாக உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் கண் டன இயக்கத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்தது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கண்டன போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தில் மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார் தலைமை தாங்கி னார். போராட்டத்தின் அவசியம் குறித்து மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா உரையாற்றினார். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று மத்திய அரசின் இந்த  புதிய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரி வித்து முழக்கங்களை எழுப்பினர்.