tamilnadu

img

இலவச மடிக்கணினி கோரி மாணவர்கள் சாலை மறியல்

உடுமலை, ஆக.1- இலவச மடிக்கணினி வழங்கக் கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் மற்றும் தளி சாலையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடுமலை கல்வி மாவட்டத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.  இப்பள்ளிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் நிலைக் கல்வி படித்து முடித்துள் ளனர். இந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழக அரசு  இலவசமாக மடிக்கணினி  வழங்கப் பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த  2017 - 2018,  2018 - 19 ஆம் ஆண்டு களில் படித்த பிளஸ் 2 மாணவர் களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாண வர்களுக்கு மட்டும் இலவச மடிக் கணினி வழங்கும் பணி நடந்து வரு கின்றன. இதனால் கடந்த 2017 -18,  2018-19 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற் றோர்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.  இந்நிலையில் கடந்த இரண் டாண்டுகளாக பயின்ற மாண வர்கள்  வியாழனன்று   உடுமலை மத்திய பேருந்து நிலையம் மற்றும் தளி சாலை சந்திப்பில்  திடீர் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதுகுறித்து மாண வர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக  அரசின் இலவச மடிக்கணினி வழங் கப்படாத நிலையில், தற்போது நடப்பு ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.  நிலுவையில் உள்ள மாணவர் களுக்கும் உடனடியாக இலவச மடிக்கணினி வழங்க வேண்டுமென  நாங்கள் படித்த பள்ளியிலும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் தொடர்ந்து கோரிக்கை மனு அளித் தோம். அப்போது கல்வி அதி காரிகள், 15 நாட்களில் உயர் அதி காரிகள் கவனத்திற்கு இதுகுறித்து கொண்டுசென்று விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  கூறினர்.  ஆனால் தற்போது வரை தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதி காரிகள் உறுதி அளித்தபடி இலவச  மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.