tamilnadu

img

வேளாண்பல்கலை விடுதியில் மாணவர் தற்கொலை

கோவை, ஆக.22- கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில், நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை  செய்த சம்பவம் மாணவர் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மருதமலை சாலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தில் தமிழக மாணவர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் என  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்ற னர். இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கென பல்கலைக்கழக வளாகத்தில் தனித்தனி விடுதிகள் உள்ளன. இதேபோல், சர்வதேச மாணவர்களுக்கென பிரத்யேக விடுதியும் இங்கு உள்ளது.  இந்நிலையில், சர்வதேச மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் ஒருவர் புதனன்று இரவு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் கணே சன், நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் உடன டியாக தகவலளித்தார். பின்னர், அங்கு விரைந்த வந்த ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய காவலர்கள் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கிய மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசார ணையில், உயிரிழந்த மாணவர் நேபாள நாட்டின் பரத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் நியூபானே (26) என்ப தும், முதுகலை பயிர் நோயியல் துறையில் இரண்டா மாண்டு பயின்று வந்ததும் தெரியவந்தது. இவரின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விடுதி மாணவர்கள் மற் றும் காப்பாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.