tamilnadu

img

செனாக்கல் பாசன திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை

விவசாய பாசனத்துக்கு செனாக்கல் பாசன திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் சட்டமன்ற தொகுதி (இடைத்தேர்தல்) திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் செவ்வாயன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், அரூர்தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய பாசனத்துக்கு செனாக்கல் கால்வாய்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர்களுக்கு ஓய்வூதியம், ஏழைகளுக்கு மனைபட்டா அரசு தொகுப்பவீடுகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரூர் பகுதிமக்களுக்கு வேலைகிடைக்கும் வகையில் சிட்கோ தொழிற்பேட்டை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.