திருப்பூர், ஆக. 25 – ஏற்கனவே திட்டமிட்டபடி பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் இரண்டாம் மண்டலப் பாசனத்திற்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிஏபி பாசனத் திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட் டக்குழு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பிஏபி விவசாயிகள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டலப் பாசனத்திற்கு வரும் 28ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப் பட உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து நிலைப் பயிரான தென்னை மரங்கள் காய்ந்துவிடு்கிற சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக உப்பாறு அணை விவசாயிகள் பிஏபி பாசன விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்குவதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தான் தண்ணீர் வழங்க வேண்டும் என அரசு அலுவலகங் களில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக செய்தி வருவ தால், இரண்டாம் மண்டல ஆயக்கட்டு விவசாயிகள் அச் சத்தில் உள்ளனர். ஏற்கனவே பிஏபி விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி இரண்டாம் மண்டலப் பாசனத்திற்கு 28ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவு பெற்ற ஆயக்கட்டு தாரர்களான பிஏபி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங் காமல், இத்திட்டத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறந் தால் பிஏபி விவசாயிகள் கடுமையாகப் போராட நேரிடும் என்றனர். பிஏபி திட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு மற்றும் கேரளம், ஆழியாறு புதிய ஆயக்கட்டு, திருமூர்த்தி அணை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மற்றும் குடிநீர் என்று ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தண் ணீர் வழங்க வேண்டும் என்று பிஏபி சட்டம் மற்றும் விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் உப்பாறு அணை சேர்க்கப்படவில்லை. எனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து திட்டமிட்டபடி வரும் 28ஆம் தேதி இரண்டாம் மண்டலப் பாசனத்திற்குத் தண்ணீர் வழங்க வேண்டும். இத்திட்டத்திற்கு தொடர்பில்லாத உப்பாறு அணை விவசாயிகள் போராட்டங்களைப் புறக் கணிக்க வேண்டும் என்று பிஏபி திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.