உடுமலை, டிச. 9- மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விக்ஞான் பிரச்சார் நிறுவனம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், கணித அறிவியல் நிறுவனம், அறிவியல் பலகை, இந்திய வானவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து வளைய சூரிய கிரகணம் பற்றிய 2 நாட்கள் பயிற்சி பட்டறை டிச.7 மற்றும் 8 ஆகிய நாட்களில் கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தினர். பயிற்சி யில் தமிழகம் மற்றும் பாண்டிச் சேரி முழுவதும் இருந்து 70 அறிவி யல் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நேரு தொழில்நுட்ப கல்லூரி எடிசன் மன்ற ஒருங்கிணப்பாளர் சதீஸ்குமார் வரவேற்றார். நேரு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் அருள்ஸ்ரீ தலைமை தாங்கினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முதல் நாள் பயிற்சி பட்டறையில் மூன்று விதமான சூரிய கிரகணங்கள் பற்றியும் சூரிய கிரகணத்தை எவ்வாறு பாதுகாப்பாக பார்க்கவேண்டும் என்பது பற்றியும், சூரிய கிரக ணம் என்பது வானில் நிகழும் வானவியல் நிகழ்வு என்று மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறு வனத்தின் விஞ்ஞானி த.வி.வெங் கடேஷ்வரன் எடுத்துரைத்தார். பந்துக்கண்ணாடி, மேஜிக் கண் ணாடி, நுண்துளை கேமரா ஆகிய வற்றை பயன்படுத்தி எளிய முறையில் சூரிய கிரகணத்தை எவ்வாறு பாதுகாப்பாக பார்க்க முடியும் என்று கோவை மண்டல அறிவியல் மையத்தின் மாவட்ட அறிவியல் அலுவலர் பழனிசாமி எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து, விபா அமைப்பின் அறிவியல் தன்னார் வலர் வாசுதேவன் அறிவியலும், வானவியலும் என்ற தலைப்பில் கலந்துரையாடினார். நேனொ சூரிய குடும்பம் தொலைநோக்கி கண்டறிந்த விதம், கிரகணம் எவ் வாறு ஏற்படுகிறது. பந்துக்கண் ணாடி, மேஜிக்கண்ணாடி சூரி யனை விட 400 மடங்கு சிறிய தாக உள்ள சந்திரன் எவ்வாறு சூரியனை முழுவதுமாக வளைய வடிவில் மறைக்கிறது என்பதை செயல்முறையில் விளக்கி கூறி அனைவரும் செய்து பார்த்தனர். ஊசித்துளை கேமரா, ஸ்பெக் ராஸ் கோப், லென்ஸின் குவியத் தூரம் காணும் முறை ஆகிய செயல்பாடுகளை கருத்தாளர் வெங்கடேஸன் அவர்கள் எடுத்து கூறினார்,
சூரிய கிரகணம் பற்றிய புரா ணக்கதைகள் மற்றும் மூடநம்பிக் கைகள் பற்றியும் கலந்துரையாடி னார். கருத்தாளர் அருண் நாகலிங் கம் சமூக வலைதளங்களில் சூரிய கிரகணம் சார்ந்த விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை எடுத்துரைத்தார். பயிற்சியில் 15 வகையான செயல்முறை விளக் கங்களும் அவர்களாகவே செய்து பார்த்ததால் அனைத்து செயல் பாடுகளும் சிறப்பாக அமைந்த தாக பயிற்சி பெற்ற தன்னார்வ லர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரி வித்தனர். இரண்டு நாள் பயிற்சியின் நிறைவு விழாவிற்கு விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தில் இருந்து வருகை புரிந்த ஸ்ரீகுமார் தலைமை வகித்தார். இப்பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரவர் மாவட்டங்களில் இப்பயிற்சி பட் டறையை நடத்த உள்ளனர். இதன் விளைவாக டிச.26 அன்று வளைய சூரிய கிரகணத்தை பொது மக்கள், மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இந்த வளைய சூரிய கிரகணம் 9 மாவட்டங்களில் முழுமையாக தெரிய உள்ளது. மற்ற மாவட்டங்களில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும். இந்த அரிய வானியல் நிகழ்வு டிசம்பர் 26 காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நீடிக்கும். அந்நேரத்தில் சூரிய் கண்ணாடிகளை பயன்படுத்தியோ சூரியனின் பிம்பத்தை விழச் செய்தோ இவ்வரிய நிகழ்வை கண்டு மகிழலாம் என்று பயிற்சி பட்டறையின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணபி ரான் தெரிவித்தார். கோவை மண்டல அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது என கோவை மண்டல அறிவியல் மையத்தின் மாவட்ட அலுவலர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். பயிற்சி பட்ட றையில் கலந்துகொண்ட அனை வருக்கும் சூரிய கிரகணம் பற் றிய விளக்க கையேடுகள், சுவ ரொட்டிகள், சூரியக்கண்ணாடி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. இறுதியாக சசிக்குமார் நன்றி கூறினார். மேலும் தகவல் களுக்கு மண்டல ஒருங்கிணைப் பாளர் கண்ணபிரான் 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்நிறு வன செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.