மே.பாளையம், ஜன.14- பொங்கல் பண்டி கையை முன்னிட்டு யானை கள் நலவாழ்வு முகாமில் யானைப்பாகன்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னு மிடத்தில் பவானியாற்றின் கரையோர பகுதியில் தமிழக அரசு சார்பில் கோவில் யானை களுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறவுள்ள இம்முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்த மான 28 யானைகள் பங்கேற்றுள்ளன. முகாமில் உள்ள யானைகளுக்கு சத்தான உணவுகள், பசுந்தீவனங்கள், நடைப் பயிற்சி, பவானியாற்று நீரில் ஷவர் பாத் குளியல், பூரண ஓய்வு என யானைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்வு பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு இன்று முகாமிற்குள் யானை பாகன்களுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் முன்னிலையில் கபடி போட்டிகள், சைக்கிள் போட்டி, குண்டு எறிதல் போட்டி மற்றும் இறகு பந்து போட்டிகள் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் வெகு உற்சாகமாக நடைபெற்றது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து அதன் யானைகளு டன் வந்துள்ள பாகன்கள் மட்டுமே பங் கேற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு முகாம் அதிகாரிகள் பரிசுகளை வழங்கினர். பொங்கல் பண்டிகை நாட் களில்யானைப்பாகன்கள் அவர்களது சொந்த ஊர்களில் இல்லாத குறையை போக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உற்சாகப்படுத்தவும் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.