திருப்பூர், ஜூலை 28- திருப்பூரை அடுத்த பல்ல கவுண்டம்பாளையம், தாரா புரத்தில் சனியன்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெ ழுத்து இயக்கம் மற்றும் பிரச் சாரம் நடைபெற்றது. ஊத்துக்குளி தாலுகா, பல்ல கவுண்டம் பாளையத்தில் மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரமும், கையெ ழுத்து இயக்கமும் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கமிட்டி உறுப் பினர் வி.காமராஜ் தலைமை தாங்கி னார். சிஐடியு சேகர் கையெழுத் திட்டு துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் சிவசாமி, இன்ஜினியரிங் சங்க செயலாளர் கந்தசாமி,பல்லகவுண்டம் பாளையம் கிளை செயலாளர் கண்ணையன், விதொச தாலுகா தலைவர் மணியன், மாதர் சங்க தாலுகா தலைவர் அம்புஜம் மற்றும் கமிட்டி உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தாராபுரம் இதேபோல் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இடைக் கமிட்டி உறுப்பினர் ஆர்.வெங்கட் ராமன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் என்.கனக ராஜ், சுப்பிரமணியன், சிஐடியு பொன்னுச்சாமி, மேகவர்ணன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.