திருப்பூர், ஜூலை 11 – திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றம் ஏழாண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது. வெள்ளகோவில் நகரில் சிறுமியை சம்பத் (57) எள் பவர் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போக்சோ சட்டப் பிரிவுகளின்படி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதனன்று மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளி சம்பத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அப ராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயந்தி உத்தர விட்டுள்ளார்.