tamilnadu

புளியங்குளம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அறிக்கை அளிக்க பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் உத்தரவு

தூத்துக்குடி, ஜூன் 10- புளியங்குளம் சிறுமி பாலி யல் துன்புறுத்தலால் பாதிக் கப்பட்டு தற்கொலை தூண் டப்பட்ட சம்பவத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விஜயலெட்சுமி, மாவட்டச் செயலாளர் பூம யில் ஆகியோர் விடுத்துள்ள செய்தி வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்வட்டம் குள த்தூர் புளியங்குளம் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு தூண்டப் பட்டாள். இதில் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு தற் போது தூத்துக்குடி அரசு மரு த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் தேசிய பிற்படுத்த பட்டோர் நல ஆணையத் துக்கு அனுப்பிய புகாரின்  அடிப்படையில், ஆணையம்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருடன் உடனடி விசா ரணை மேற்கொண்டு ஒரு  வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள் ளது. ஒரு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பா ளர் ஆகியோர் அல்லது அவர் களது பிரதிநிதிகள் ஆணை யம் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.