தருமபுரி, மே 3-அதியமான் சமூக வரலாற்று ஆய்வுமையம் சார்பில் தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நூற்றாண்டுவிழா கருத்தரங்கம் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. பேராசிரியர் இ.பி.பெருமாள் தலைமை வகித்தார். தகடூர் புத்தகபேரவைதலைவர் இரா.சிசுபாலன் வரவேற்றார். தேவிபிரசாத்தின் ஆய்வு நெறிமுறைகள் குறித்து தொல்லியல்துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குனர் ர.பூங்குன்றன் பேசினார். தமிழகத்தில் பூதவாதமும், தேவிபிரசாத்தும் என்ற தலைப்பில் ஆய்வாளர் காமராசன் பேசினார். தேவிபிரசாத்தின் தொல்லியல் அணுகுமுறை குறித்து அதியமான் சமூக வரலாற்று ஆய்வுமையசெயலாளர் நிறுவனர் முனைவர்தி.சுப்பிரமணியன் பேசினார்.வரலாற்றில் தகடூர்நாடு என்ற நூலை அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையபுரவலர் மருத்துவர் இரா.செந்தில் வெளியிட புதிய சேப்பேடு நிறுவனர் அறம்.கிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் அ.வெ.சாமிக்கண்னு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இறுதியில் வே.விசுவநாதன் நன்றி கூறினார்.