கோவை, பிப். 13 - கோவை இஎஸ்ஐ மருத்துவ மனையில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவாளர்கள் மற்றும் தனியார் காவலர்களுக்கு ஊதியம் தராமல் இழுத்தடிப்பதைக் கண்டித்து இஎஸ்ஐ மருத்துவமனையின் முன்பு வியாழனன்று போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சிங்கா நல்லூர் வரதராஜபுரம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்து வமனையில் பத்மாவதி என்ற தனி யார் நிறுவனத்தைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட பணியா ளர்கள், துப்புரவுப் பணியாளர்க ளாகவும், மருத்துவமனை பாதுகா வலர்களாகவும் பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில் பத்மா வதி நிறுவனத்தினர் ஒப்பந்த பணியாளர்களின் ஊதியத்தை தராமலும், கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தையும் பிடித்தம் செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான ஊதி யம் தற்போதுவரையில் தரப்பட வில்லை. இதுகுறித்து பத்மாவதி நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் பேசிய போது, நவம்பர் மாதத் திற்கான தொகை நிர்வாகத்தி டம் இருந்து கிடைக்கப்பெறவில் லையென அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர் கள் அனைவரும் பணிகளை நிறுத்தி இஎஸ்ஐ மருத்துவமனை யின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படிப்பறிவில்லாத பணியாளர்களின் சம்பளங்களை பிடித்து ஏமாற்றி வருவதாக வும், இதுகுறித்து கேட்டால் வேலையை விட்டு தூக்கி விடு வதாக நிர்வாகத் தரப்பில் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனையறிந்து சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலு சாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.மனோகரன், ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செ யலாளர் கே.ரத்தினகுமார் மற்றும் சுந்தர்ராஜ் உள்ளிட்ட தலைவர் கள் தொழிலாளர்களுக்கு ஆதர வாக திரண்டனர். இதனையடுத்து பத்மாவதி நிர்வாகத்துடன் தலை வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் வருகிற பிப்.21ஆம் தேதிக்குள் நவம்பர் மாத ஊதி யத்தை தருவதாக உறுதிய ளித்தனர். இதனையடுத்து அனை வரும் பணிக்கு திரும்பினர்.