tamilnadu

சீரற்ற மின் விநியோகம் சிறுகுறுந்தொழில்கள் கடும் பாதிப்பு குறுந்தொழில் முனைவோர் சங்கம் குற்றச்சாட்டு

கோவை, ஜூன் 13– கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சா ரம் தடைபடுவதால் கோவை மாவட்டத் தில் சிறு, குறுந்தொழில்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக டேக்ட் குற்றம்சாட்டியுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, கோவை மாவட்ட மின் பகிர்மானம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்று  வருகின்றனர்.  இந்நிலையில் மின்வாரியத்தின் அலட் சியம் காரணமாக மின் விநியோகத்தில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் ஏற்படு கிறது. இதன் மூலம் ஒவ்வொரு தொழிற் சாலைக்கும் தினமும் ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பல துணை மின் நிலை யங்களில் காற்று, மழையைக் காரணம் காட்டி ஒரு மணி முதல் 4 மணி நேரம் வரை மின்சாரத்தை நிறுத்து விடுகின்றனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், மின் வயர்கள் துண் டாகி விட்டதாகவும், ஜம்பர்கள் பழு தடைந்து விட்டது என ஏற்க முடியாத காரணங்களைத் தெரிவிக்கின்றனர்.  ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில், ஒவ்வொரு துணை  மின் நிலையத்திலும் பராமரிப்புப் பணிக் காக நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப் படுகிறது. இப்படி இருக்கும் நிலையில், சிறிய பழுது ஏற்பட்டுவிட்டது எனக்கூறி, மணிக்கணக்கில் மின்சாரத்தை நிறுத்து கின்றனர். தினமும் 3 மணி நேரம் மின்சா ரம் தடைபடுவதால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பிட்ட தேதியில் மின் கட்டணம் கட்டத் தவறினால், உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரி கள், மின் விநியோகத்தில் உள்ள சிக்கல் களைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துணை மின் நிலையங்களில் தரமான பொருட்களை மாற்றி, மின் விநியோகத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.