மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
உதகை, நவ.17- நீலகிரி மாவட்டம் முழுவதும் 283 இடங்களில் வீடுகள் கட்ட விதிக்கப் பட்ட தடை உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதி களில் வீடுகள் கட்டவும், வீடுகளை புனரமைப்பதற்கும் மாவட்ட ஆட்சி யர் கடந்த அக்டோபர் மாதம் வெளி யிட்ட ஆணையினை திரும்பப்பெற வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் வீடுகள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளிலேயே அனுமதி பெறும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும். மசினகுடி பகுதியில் மக்கள் பயன்படுத்தும் வகையில் வாகனங்கள் சென்றுவர அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தியும், ஜனநாயக ரிதியிளன போராட்டங்களுக்கு கூட அனுமதி மறுத்து வரும் காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இடைக்கமிட்டி செய லாளர் வி.மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி துவக்கி வைத்து பேசினார். சி.வி.விசுவநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. மகேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வீடு கட்ட போடப்பட்ட தடை உத்தரவை திரும்பப்பெற வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சேரம்பாடி பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.ஜே.வர்கிஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சி.மணிகண்டன், டி.ஏ.சாந்தா, விவசாய சங்க நிர்வாகி கள் சி.கே.கோயா, சி.கே.பாவா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகி அனிபா மாஸ்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் இடைக்குழு உறுப் பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப் பினர் வி.வி.கிரி தலைமை வகித்தார். இடைக் கமிட்டி செயலாளர் எல்.சங் கரலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.ராஜேந்திரன், எச்.இ.சஞ் சீவி ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அடையாள குட்டன் வாழ்த்திப் பேசி னார். மாவட்ட குழு உறுப்பினர் கே. சுந்தரம் நன்றி கூறினார்.
மஞ்சூர் பஜாரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ஆல் தொரை தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் செய லாளர் முரளிதரன், விவசாயிகள் சங்கத்தின் தாய் சோலை செயலாளர் மாதவன், கிளைச் செயலாளர் ருத்ரன், தோட்டத் தொழிலாளர் சங்க நிர்வாகி முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பந்தலூர் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். கூடலூர் இடைக்குழு உறுப்பினர் ஜி.வர்கிஸ், குமரன் சம்சுதீன் அருணாச்சலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். அய்யங்கொல்லி கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் எருமாடு இடைக்கமிட்டி உறுப்பினர் கே.அச்சுதன் மாஸ்டர் தலைமை தாங்கினார். இடைக் கமிட்டி செயலாளர் கே.ராஜன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஹமீது மாஸ்டர், எம்.ஏ.சௌகத் அலி, இடைக் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெள்ளெரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கேசவன் மாஸ்டர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.யோகண்ணன் துவக்கி வைத்து பேசினார். எருமாடு ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.