districts

img

குன்னியூர் ஊராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்

குடவாசல், செப்.23 -  திருவாரூர் ஒன்றியம் குன்னியூர் ஊராட்சி யில் வடக்குத்தெரு, தெற்குத்தெரு சாலையை  சீர்செய்வதற்கான வந்த நிதியில், சாலை போடாமல் முறைகேடு செய்துள்ளனர். ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தின் வாயிலாக வீடுகளுக்கு வழங்கப் பட்டுள்ள குடிநீர் குழாய்கள் செயல்பட வில்லை. பல இடங்களில் இண்டியன் மார்க்  குடிநீர் போர் பம்பு செயல்படாமல் உள்ளது.  எரியாத தெரு விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து எரிய வைக்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திருவாரூர் முதல் திருத் துறைப்பூண்டி சாலை குன்னியூரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  மறியலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். போராட்டத்தில் சிஐடியு மாவட் டத் தலைவர் இரா.மாலதி, மூத்த தோழர் பி.மாதவன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் பங்கேற்ற னர். போராட்டத்தை அறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், நெடுஞ்சாலை அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலை வர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி,  மக்களின் கோரிக்கைகளை 15 நாட்களில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர். பின்னர் சாலை மறியல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.