tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து

நவ.15 ல் கண்டன ஆர்ப்பாட்டம் -  அனைத்து கட்சி அறிவிப்பு

பொள்ளாச்சி, நவ. 7- பொள்ளாச்சி பாலியல் வழக்கு  குற்றவாளிகளின் மீது பதியப் பட்ட குண்டர் சட்டம் ரத்து செய் யப்பட்டதை கண்டித்து நவ.15 ஆம் தேதியன்று அனைத்து கட்சி கள், பொதுநல அமைப்புகள் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி, ஆபாசமாக படம்பிடித்து பாலி யல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச் சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட வர்களை கைது செய்து கடுமை யாக தண்டிக்கக்கோரி அனைத்து அரசியல் கட்சியினர், மாதர் சங் கத்தினர் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.  இதையடுத்து இளம்பெண் களை மிரட்டி பாலியல் பலாத்கா ரம் செய்த சம்பவத்தில் தொடர்பு டைய முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ்குமார்,  மணி வண்ணன் உள்ளிட்டோர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டது.

அதேநேரம், இவ்வழக்கில் ஆளுங்கட்சியின் முக்கிய பிர முகரின் வாரிசுகள் சம்பந்தப்பட் டிருப்பதால் வழக்கை சிபிஐ-க்கு  மாற்றக்கோரி தமிழகம் முழுவ தும் மார்க்சிஸ்ட் கட்சி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார் பில் நடைபெற்ற கண்டன போராட்டங்களையடுத்து வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இப்போராட்டங்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான தமிழக அரசு குற்றவாளிகள் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில டைத்தனர். இதன்பின்னர் வழக் கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற் போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிக ளான திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர் மீது விதிக் கப்பட்ட குண்டர் சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் புதனன்று பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டமைப்புகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொள்ளாச்சி தாலுகா செய லாளர் கே.மகாலிங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில கழக வெளியீட்டு செய லாளர் இரா.மனோகரன், நகர செயலாளர் பழ.அசோக், மதிமுக மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ச.பிரபு, சித்திக்,  அபுபக்கர்,  சிபிஐ வட்டார செயலாளர் சண்முகம், மமக மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, மஜக நகர செயலாளர் ராஜா ஜெம்சா, அன் சார், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொருளாளர் வானுகன் மற்றும் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி,  மாவட்ட குழு உறுப்பினர் பத்மா வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் குறித்து மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா கூறியதா வது, பொள்ளாச்சி பாலியல்  வழக்கின் முக்கிய குற்றவாளிக ளான திருநாவுக்கரசு மற்றும் சப ரிராஜன் மீது  விதிக்கப்பட்டிருந்த குண்டர்  சட்டத்தை அடிப்படை ஆதாரம் இல்லையென்று ரத்து  செய்து சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்தது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே, இவ்வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு மெத்தனமாக உள் ளது. மேலும், குற்றவாளிகளை தப்பிக்க விடும் நோக்கத்தில் காவல் துறையும், அரசும் செயல் படுவது அம்பலமாகியுள்ளது. இவ்வழக்கினை நீர்த்து போகச் செய்ய தமிழக அரசு எந்த எல் லைக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கினை சிபிஐ விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவ.15 ஆம் தேதியன்று பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப் பாட்டத்தில் அனைத்து கட்சியி னரும்,  பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என  அவர் அறைகூவல் விடுத்துள் ளார்.