tamilnadu

img

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.... அனைத்துக் கட்சிகள் மற்றும் மாதர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்யக்கோரி, அனைத்துக் கட்சிகள் மற்றும் மாதர் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி.,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு ஞாயிறன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,  மத்திய, மாநிலஅரசுகள் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்துவதில் தவறிவிட்டன. பெண்கள், குழந்தைகள் மீது பாலியல்கொடூரம் தொடர்ந்து அரங்கேறிவரு கிறது. அதற்கு நீதி கேட்டு போராடுபவர் களையும் காவல்துறை கொண்டு தடுக்கிற மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது. பொள்ளச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். ஒரு பெண் தனக்கு நடத்த கொடுமையை  தைரியமாக வெளியே வந்து சொன்னதற்குப் பிறகும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வழக்குக்கில் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என கேட்டது கொஞ்சம் கூட நியாயமற்றது.

இந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் என்பவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். அதேபோல், கரோன் பால் மற்றும் பைக் பாபு ஆகிய இருவரும் பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாக உள்ளனர். இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளான இவர்களை அதிமுக அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தி.மு.க.ஆட்சிக்கு  வந்தவுடன் மாவட்டம் தோறும் பெண்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப் படும்” என பேசினார்.

கே.பாலபாரதி
இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக சிபிஐக்கு நாங்கள் கோரிக்கையாக ஒன்றே ஒன்றைமட்டு தெரிவித்து கொள்கிறோம். இதுஉத்திரபிரதேசமல்ல,  தமிழகம். ஆகவே முழுமையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளாக பொள்ளாச்சி பகுதிகளில் தற்கொலை செய்துள்ள இளம் பெண்களின் பட்டியல் தயாரித்து முழுமையாக விசாரித்து உன்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமல்ல, குற்றவாளிகளின் பின்னால் நிற்கின்ற அதிமுக பிரமுகர்களை யும் கைது செய்ய வேண்டும். மேலும், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் சிறந்த மாநிலம் என பச்சையாக பொய் கூறுகிறார். நாகை மாவட்டத்தில் கட்டிடதொழிலாளியான பெண்ணை கோயிலில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தொடர்ந்து 3 வயது குழந்தைகள் முதல் 90 வயது வரையுள்ள பெண்களும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்” எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

இப்போராட்டத்தில் திமுக பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டசெயலாளர் ஏ.ராதிகா, இந்திய மாதர்தேசிய சம்மேளன கோவை மாவட்டசெயலாளர் மஞ்சுளாதேவி, திமுக முன்னாள் அமைச்சர்கள் மு. கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, கோவைசட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர்தென்றல் செல்வராஜ், மடத்துக்குளம்சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ் ணன், திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம், கொ.நா.ம.தே கட்சியின் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில்,  விசிக மாவட்ட செயலாளர் ச.பிரபு, த.பெ.தி.க மாநில வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன், திமுக நகர செயலாளர் வரதராஜன், ஆதித்தமிழர் பேரவை மாநிலக் குழு உறுப்பினர் கோபால், மமக மாவட்ட பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் திமுக கோவைமாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ்நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர்.