திருப்பூர், டிச. 17 - ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழி யர்களுக்குரிய மருத்துவ மற்றும் பணப் பலன்களை தாமதமின்றி வழங்கக் கோரி திருப்பூரில் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற தொலைத் தொடர்பு மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் தங்கமணி தலைமை ஏற்றார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் போராட் டத்தைத் தொடக்கி வைத்தார். மாநில நிர்வாகி குடியரசு போராட் டத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் வாலீசன், செயலாளர் குமரவேல் ஆகியோர் உரையாற்றினர். முடிவில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். இதில் ஓய்வு பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.